என்று நான் எண்ணிய காலங்கள் உண்டு ..
இல்லை.. இல்லவே இல்லை..
தாய் நாட்டைப் பற்றியும் அதன் வரலாற்றைப்
பற்றியும் சிந்திக்க வைத்தது என் தனிமை ..
இயற்கையைப் பற்றியும் அதன் சௌந்தரியத்தையும்
கண்டு ஆனந்த களிப்படைய வைத்தது என் தனிமை ..
வீசும் காற்றின் வாடையையும் அதன்
அழுத்தத்தையும் உணர வைத்தது என் தனிமை ..
சின்னஞ்சிறு பறவைகளின் மொழிகளையும்
அதன் ரீங்காரத்தையும் ரசிக்க வைத்தது என் தனிமை ..
மேலே வானத்தை பார்க்க வைத்து
மனதை விரிவடையச் செய்தது என் தனிமை ..
எனக்குள் உள்ள என்னிடமே என்னை
மனம் விட்டு பேச வைத்தது என் தனிமை ..
எல்லாவற்றையும் விட
மனதில் இருந்த எல்லா சுமைகளையும் அகற்றி
மனதை லேசாக்கிக் காட்டியது என் தனிமை ..
உணர்தேன்..தனிமையிலும் இனிமை..
தனிமையும் ஒரு சுகம் தான் !!