Sunday, August 18, 2013

விடுதலை நாள் அன்று !!

66- ம் சுதந்திர தின நாள் வந்து விட்டது..
எப்பொழுதும் என் அழைப்பை ஏற்று வரும் 
என் எழுதுகோல் இன்று ஆர்வத்துடன் தானாகவே 
வந்து விட்டது...சரி என் இந்தியாவில் சுதந்திரத்துக்கு 
பஞ்சமே இல்லை..உனக்கு மட்டும் என்ன குறைவு ..
உன் சுதந்திரத்துக்கு நான் தடையாக இருக்கவில்லை ..
நீ உன் உல்லாச நடைசெல் என்றேன் ..பின்னர் தான் உணர்ந்தேன்..
இதற்கு சுதந்திரம் கொடுத்தது தவறு என்று..
எத்தனை கேள்விகள் !!விடை அளிக்கவே இயலவில்லை..

ஆம்..முதல் கேள்வியே என்னை அதிர வைத்துவிட்டது..
என் எழுதுகோல் கேட்கிறது ?? விடுதலை நாள்..இன்று தலைவர்களின் நினைவு மண்டபங்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழியுமா ?? 
இல்லை இல்லை மக்கள் அங்கு எல்லாம் செல்ல மாட்டார்கள் ..
ஓ !! அப்படியெனில் பள்ளி கூடங்களில் எல்லாம் வரலாற்றைப் பற்றி இந்நாளில் கூட்டம் கூட்டப்படுமா ??
இல்லை இல்லை ..பள்ளிகூடங்களுக்கு அன்று விடுமுறை என்றேன்..
ஓ !!அப்படியெனில் ஒவ்வொரு வீதிகளிலும் அவர்கள் தியாகம் நினைவு கூறப்படுமா ??
இல்லை இல்லை கூட்டங்கள் எல்லாம் கட்சிகளுக்காக மட்டுமே..இதற்கெல்லாம் பெரும்பாலும் இல்லை ..
ஓ !! அப்படியெனில் தொலைகாட்சிகளில்அரும்பெரும் அத்தகைய காட்சிகளை கொண்ட படங்கள் ஒளிபரப்படுமோ ?? 
இல்லை இல்லை தொலைகாட்சிகளில் புதிய படங்களை பற்றி தான் வரும்..
ஓ !! அப்படியெனில் உங்கள் வரலாற்றை நீங்கள் நன்றி பாராட்டும் நாளே உங்களிடம் கிடையாதா ???
இவ்வளவு கேள்விகள்  கேட்டது போதும் உனக்கு சுதந்திரம் அளித்தது தவறு என்று கூறிவிட்டு மூடிக்குள் அடைத்து விட்டேன் எங்கள் அரசியல்வாதிகளைப் போன்றே!!

​ஒரு நாட்டின் இளைநர்களுக்கு அதன் வரலாறு தெரிந்திருப்பது மிகவும் அவசியம்..ஆனால் இந்திய வரலாறு ??? ​

Sunday, April 7, 2013

மூன்றெழுத்து !!!


ஹ்ம்ம் ...இந்த மூன்றெழுத்துக்கள் மனித வாழ்வை
படுத்தும் பாடுகள் தான் எத்தனை ...
பற்று ,பாசம் ,நேசம் ,பரிவு ,புகழ் ,கற்பு ,
நட்பு ,வறுமை ,பணம் ,சோகம் ,களவு ,
மோகம்,மௌனம் ,மானம் இப்படி 
மூன்றெழுத்தைக் கொண்டு இவைகள் 
ஆடும் ஆட்டத்தை சொல்லத் தேவையில்லை..
உணர்ந்து கொண்டும் அனுபவித்துக் கொண்டும் தான் இருக்கிறோம் ..
இவை அனைத்தும் சேர்ந்து மனிதனை முழுமை என்ற 
மூன்றெழுத்தை அடையவிடாமல் தடுகிறது ..

Saturday, April 6, 2013

என் இலங்கை தமிழர்களுக்காக !!!!

சிட்டுக்குருவியே ஏ சிட்டுக்குருவியே !
ரம்மியமான இயற்கை எழுனூடே தேனிசை போல் எழுந்த உன் குரல் கேட்டு கண் விழித்தேன்..
என்ன ஒரு அமைதி ..லேசாய் சோம்பல் முறித்து ஒருவாறு அன்றைய பயணத்தை தொடங்குகிறேன்..
என் இனிமையை சொல்லப் போனால் ஜன்னலின் ஓரமாய் வீசும் காற்று கூட எனக்கு இனிமை அளிக்கிறது..
நான் மட்டுமல்ல ...என் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இனிமையாய் தான் பொழுதை தொடங்குகின்றனர்...ஏனெனில் எது உள்ளதோ இல்லையோ  சுதந்திரம் உள்ளது அல்லவா !

ஆனால் இதே இன மக்கள் தான் கடல் தாண்டி 1200  கி.மீ தொலைவில் இலங்கை என்ற குட்டித் தீவில் வசிக்கின்றனர்..
சும்மா செல்லவில்லை குருவியே ! இந்தியப் பேரரசர்களால் பெருமதிப்போடு கௌரவத்தொடு பல ஆண்டுகளுக்கு முன் மான மரியாதையுடன் சென்றனர்..
ஆனால் அவர்களது இப்போதைய நிலை ??
எங்கள் இந்திய நாட்டில் ஒரு நாய்க்கு இருக்கும் சுதந்திரம்(கட்சிக் கொடிமரத்தை பார்த்தால் கூட கால் தூக்கும்) கூட அவர்களுக்கு அங்கு இல்லை..

அப்படி என்ன நிலை என்று கேட்கிறாயா ?
எப்பொழுதும் போர் ஆவணத்தை பார்க்கும் நிலை..
அடுத்த நிமிடம் எவன் என்ன செய்வானோ என்ற நிலை..
சராசரி மாணவன் தன் கல்வி இலட்சியங்கள் 
நிறைவேறவாய்ப்பே வராதோ என்ற எதிபார்போடு கூடிய நிலை..
அடுத்த வேலை உணவுக்கு என்ன நேருமோ என்ற நிலை..
பெண்கள் தங்கள் கற்பிற்கு எவன் உலை வைப்பானோ என்ற அச்சத்தோடு கூடிய நிலை..
எவரேனும் இதற்கு எல்லாம் தீர்வு காண மாட்டாரோ என்ற ஏக்கம் நிறைந்த நிலை..
எல்லாவற்றிகும் மேலாக பக்கத்து நாட்டிற்கு அகதியாய் செல்லும் போது அவர்களால் இழிவு படுத்தப்படும் நிலை..



போர் காலத்தில் அங்கு நடந்த கொடுமைகளைக் கேட்டால்  இவை எல்லாம் மாந்தர்கள் செய்யும் செயல்கள் தானா  என நீயே கேவலப்படுதுவாய்..

இப்படி அவர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பார்க்கும் போது இறைநிலையிடம் ஏன் படைத்தாய் என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது ...




"ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்ல பல புயல்களை கடக்க வேண்டுமாம்"...ஆனால் இவர்கள் இன்னும் எத்தனை புயல்களை கடக்க வேண்டும்...கடைசி வரைக்கும் அவர்கள் வாழ்வு  தென்றலை பார்காமலேயே ஏன் அதன் வாசத்தை கூட உணராமல் முடிந்து விடுகிறது!!


இதை எல்லாம் என் நீங்கள் தட்டிக் கேட்கக் கூடாது என்று கேட்கிறாயா குருவியே!!
எங்கள் மாநிலத்திலும் பல ஆயிரம் பேர் இதை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர்..
ஆனால் எங்கள் ஆட்சியாளர்கள் அதை வைத்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மகான் கூறினார் உலகி நாடுகளிலேயே இந்தியா தான் சித்தர்களும் ஞானிகளும் அதிகம் வாழும் நாடு.. எனவே உலக அமைதியை முன் எடுத்துச் செல்ல இந்தியாவிற்கு தான் எல்லா தகுதியும் உண்டு என்று.. அப்பேற்பட்ட நாட்டை எங்கள் ஆட்சியாளர்கள் அவலங்களை கை கட்டி வேடிக்கை பார்க்க செய்து விட்டனர் ...அட உலக அமைதிக்கு கூட  வேண்டாம் இலங்கை அமைதிக்கு குரல் கொடுக்க கூடாதா??பெரிதாய் ஒன்றும் வேண்டாம் அவர்களுக்கான வாழ்வுரிமை ,சுதந்திரம் இதை அளிக்க இந்தியா நினைத்தால் இயலாதா ??சுய லாபம் கருதி விளையாட இது என்ன மைதானமா??பல ஆயிரம் பேரின் உயிரும் உணர்வும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா!!கடைசிக்கு உதவி செய்யா விட்டால் கூட பரவாயில்லை..உபத்திரம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா..அது என்ன உபத்திரம் என்று கேட்கிறாயா!!இங்கு தமிழ் நாட்டில் திரள் திரளாய் மக்கள் போராடி கொண்டிருகின்றனர்..ஆனால் பெரிய புள்ளிகளோ அந்த ரஜ பக்சே வை அழைத்து வந்து ஊர் சுற்றி காண்பிகின்றனர்..இங்கு யார் அழுதார்கள் அவன் மகனுக்கு விருது வழங்கவில்லை என்று..இப்படி எல்லாம் செய்தால் வன்முறை தான் வளரும்..அரசாங்கமே அதை ஊக்குவிப்பது போல் உள்ளது..

திறமான ஆட்சி நடத்துவதாய் பறை சாற்றும் ஆட்சியாளர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்..
"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவர் எல்லாம் உயிர் அறிவை உள் உணர்வாய் பெற வேண்டும்" என்றார் வேதாத்திரி மகரிஷி..நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுப் பர்ருங்கள் ..

சரி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று கேட்கிறாயா குருவியே!!
தீர்வு இல்லை...ஆனால் ஒன்று மட்டும் சொல்ல  இயலும்.திண்ணிய எண்ணம்..இலங்கை தமிழர்கள் கொடுமைகள் இன்றி சுதந்திரமாய் வாழ விரைவில் ஒரு வழி வேண்டும் என்ற ஒட்டுமொத்த  தமிழர்களின் எண்ணம்  ஒரு நாள் நிச்சயம்  நிறைவேறும்...ஈழம் இறக்கவில்லை ..அது புதியதோர் விடியலை நோக்கி மீண்டும் பிறக்கும்!!

நான் சொன்ன இந்த வரலாற்றை கேட்டு நல்ல வேலை தமிழனாக பிறக்கவில்லை என்று நினைகிறாயா குருவியே...
அதுவும் நல்லது தான் நீயாவது நிம்மதியாய் இரு!!
(உனக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை!!அந்த பக்கம் மறந்து கூட சென்று விடாதே ..தமிழ் நாட்டில் இருந்து வந்தாய் என்றால் உன்னையும் விட்டு வைக்க மாட்டார்கள் அந்த வெறியர்கள்!!)