Saturday, July 30, 2011
நானும் என் எழுதுகோலும்
சொல்வளத்தில் திளைத்திருந்தும்
சொல்ல இயலாத என் எண்ணங்களை
சிதறடிக்கச் செய்தாய்...
என் உணர்வு கொல்லப்படும்
போதெல்லாம் கண்களில் கண்ணீருடன்
வந்தேன் உன்னிடம்..யாராலும்
அளிக்க முடியா ஆறுதலை
அளித்தாய் நீ எனக்கு !!
வெகுண்டு புழுங்கி மனதின்
உள்ளேயே வைத்திருந்த
பல குமுறல்களை
காகிதத்தை கண்ட உடன்
வெளியே இறக்கச் செய்தாய்
உன் வாயிலாக ....
பல நேரங்களில் என்னை எனக்கே
எடுத்துக் காட்டிய கண்ணாடியாகவும்
இருப்பாய் நீ எனக்கு ...
உயிரற்ற பொருளாய் அனைவரும்
உன்னை பார்த்தாலும்
உயிர் உள்ளவர்களால் கூட
புரிந்து கொள்ள முடியாத உணர்வைப்
புரிந்து கொண்டு மெதுவாய் காற்றில்
அசைந்தாடி நீ எழுதும் எழுத்துக்களே
என் கண்ணீருக்கான விலைகள்...
மற்றவர்களோடு நான் பயணித்ததை
விட உன்னோடு நான் செய்த
பயணங்களே அதிகம் ...
மனம் பேசாத பல விஷயங்களை
கண்கள் பேசாத மொழிகளை
என் எழுதுகோலாகிய நீ
பேசினாய்...
இன்னமும் பேசுவாய் ..பேசுவோம் !!!
எனது சிதறல்கள்
உணர்வுகளின் இறப்பிற்கு கல்லறை அமைத்தால்
அதற்கு இப்பிரபஞ்சம் போதுமா ??
பெண்
தன் சிறகு உடைக்கப்பட்டு விட்டது
என்பது கூட தெரியாமல் மீண்டும்
பறக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு
காத்திருப்பவள்....ஏக்கத்தில் ஊரிய
நெஞ்சம் இவளது..
மௌனம்
அறிந்து உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து
கொள்ளக் கூடிய இனிய மொழி !!!
இப்படியும் ஒரு வலி
நான் எப்படி எல்லாம் இருந்தேன் என்று
எண்ணும் போது எழும் நினைவுகள்
தருவது ....
யாருமில்லா நேரத்தில்
தனிமையில் தவிக்கும் இதயத்திற்கு
ஜன்னலின் ஓரமாய் வீசும் காற்று
மட்டுமே துணை !!!
Subscribe to:
Posts (Atom)




