Sunday, November 20, 2011

ஒரு வேளை


பெண்ணாக இருப்பது தான் இவ்வளவு இருந்தும் நீ முன்னேற தடைகளா ??
சொல்லடி என் இந்தியத் தாயே !!

Saturday, November 5, 2011

நிமிர்ந்த நன்னடை .....


நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
என்றான் என் பாரதி ...அவரது கூற்றோடு என் கூற்றையும் சேர்த்துக் கொள்கிறேன் ...
இன்றைய பெண்களுக்கு இது மட்டும் போதாது ..

பகலவனைக் கூட பெயர்த்து எடுக்கும்
வீரிய பார்வை வேண்டும்!!

எங்கும் எதிலும் எதையும் சாதிக்கும்
வீரியம் வேண்டும் !!

சுருக்கமாகச் சொன்னால் பெண்கள் நீரினைப் போன்று இருக்க வேண்டும்....
அமைதியாய் இருக்கும் வரை அழகிய கடல் ...
பொங்கினால் சுனாமி !!
இவ்வுலகில் இதுவரை நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி எனில் ரஷ்யப் புரட்சியை சொல்லலாம்...இன்னும் நிறைய மிகவும் சக்தி வாய்ந்த, வலிமை வாய்ந்த புரட்சிகள் உண்டு...ஆனால் இதை விடவும் வலிமை வாய்ந்த பெரிய புரட்சிகள் உள்ளது ..அவை என்ன தெரியுமா ??


தனிமனிதன் மனதில் ஏற்படும் மனப் புரட்சிகள் ...
இதன் வலி, இழப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்..
அப்படி ஏற்படும் புரட்சிகளை வரலாறு அறியாது...
அதற்கு எந்த சுவடும் கிடையாது...
அது அவனுக்கு உள்ளேயே ஒடுங்கி ஒடுங்கி அவனைக் கொல்லும்..

Sunday, October 2, 2011

கல்லூரி வாழ்கையின் கடைசி நாள் (ஏக்கத்துடன் நான் )


உலக வாழ்க்கை பேசும் என் மனமே
பிரச்சனைகள் அலசும் என் மனமே
எல்லாவற்றையும் செய்யும் உனக்கு
என் நண்பர்களைப் பற்றி தெரிய
வேண்டாமா...சொல்கிறேன் கேள் ...
எட்டுத் திக்கிலும் கிடைக்காத எட்டு மணிகளை
முதலாய்க் கண்டேன் முதலாம் வருடத்திலே..
கண் இமைக்கும் நேரத்தில் நட்பெனும்
காந்த சக்தியினால் ஈர்க்கப்பட்டோம் ...
காந்தத்தில் கூட ஈர்ப்பு வெறுப்பு எனும் இரு
துருவங்கள் உண்டு ...ஆனால் எங்கள் நட்பில்
ஈர்ப்பு துருவம் மட்டுமே ..
ஒருவரை ஒருவர் ஈர்த்தோம் ஈர்த்தோம்
ஆனால் காலத்திற்கு எங்கள் மேல் பொறமை
பொங்கி விட்டான் போலும் ..பிரியும் நாள் வந்துவிட்டது
சென்று வா என்கிறார்கள் ..எங்கு செல்வேன்
அவர்களை விடுத்து ..
என் எழுதுகோல் பேச மறுக்கும் வார்த்தைகளை
என் சொல்லி விளக்குவேன்...
உணர்வுகள் உளறுகிறது...பேச வார்த்தை இல்லை ...
நன்றி சொல்ல நாட்கள் இல்லை..கடைசியாக
நான் கூற நினைக்கும் ஒரு வார்த்தை மூன்று எழுத்தாயினும்
மிகையாக நான் கருதும் ஓர் வார்த்தையான நன்றியை சமர்பிக்கிறேன் ..
நன்றி நன்றி நன்றி தோழிகளே !!!!

Sunday, September 25, 2011

என் கனவு ...

யாரும் மானிடரே இல்லாத நிசப்த உலகம் வேண்டும்
எனக்கும் என் உணர்வுக்கும்..
வெறும் வெற்றிடமே போதும் எங்களுக்கு...

Saturday, August 6, 2011

அனுபவித்திருந்தால் உணரலாம்





அளவுக்கு அதிகமாக கிடைக்கும் போது அன்பு கூடத் திகட்டும்...

????



உனக்கென்று யாரும் இல்லையோ??
உன்னால் பேச இயலாதா??
ஏன் இந்த சோகம்??
என் தனிமை என்னைப் பார்த்து
கேட்ட கேள்விகள் இவை ..
பதில் தேடிப் புறப்பட்டேன்
கால்கள் போன பாதையில் ..
அப்போது தான் புரிந்தது ..
விடை தேட இது புத்தகம் இல்லை!!
மாபெரும் கடல் என்று !!

அன்று ஒரு நாள் என் மனதில்




உணர்விற்கும் உலகத்திற்கும் இடையே
ஏற்படும் போராட்டம் இது...
இருண்டிருப்பது இவ்வுலகமா ??
இல்லை என் மனமா ??

விளக்கம் அழிக்கவோ
பதில் கூறவோ இங்கே
ஒரு கார்ல் மார்க்ஸ்ம் இல்லை..
லெனினும் இல்லை ...
ஏன் இங்கு மனிதர்களும் இல்லை..

காலம் கடக்க கால்கள் உண்டு ...
ஆனால் அதை ரசித்து
செல்ல இன்பம் இல்லை ...
எல்லாமே உண்டு ...
ஆனால் எதுவுமே இல்லை ...
புதிருக்குள் வாழ்க்கை !!
கண்ணீருக்குள் இதயம் !!

Saturday, July 30, 2011

நானும் என் எழுதுகோலும்



சொல்வளத்தில் திளைத்திருந்தும்
சொல்ல இயலாத என் எண்ணங்களை
சிதறடிக்கச் செய்தாய்...

என் உணர்வு கொல்லப்படும்
போதெல்லாம் கண்களில் கண்ணீருடன்
வந்தேன் உன்னிடம்..யாராலும்
அளிக்க முடியா ஆறுதலை
அளித்தாய் நீ எனக்கு !!

வெகுண்டு புழுங்கி மனதின்
உள்ளேயே வைத்திருந்த
பல குமுறல்களை
காகிதத்தை கண்ட உடன்
வெளியே இறக்கச் செய்தாய்
உன் வாயிலாக ....

பல நேரங்களில் என்னை எனக்கே
எடுத்துக் காட்டிய கண்ணாடியாகவும்
இருப்பாய் நீ எனக்கு ...

உயிரற்ற பொருளாய் அனைவரும்
உன்னை பார்த்தாலும்
உயிர் உள்ளவர்களால் கூட
புரிந்து கொள்ள முடியாத உணர்வைப்
புரிந்து கொண்டு மெதுவாய் காற்றில்
அசைந்தாடி நீ எழுதும் எழுத்துக்களே
என் கண்ணீருக்கான விலைகள்...

மற்றவர்களோடு நான் பயணித்ததை
விட உன்னோடு நான் செய்த
பயணங்களே அதிகம் ...

மனம் பேசாத பல விஷயங்களை
கண்கள் பேசாத மொழிகளை
என் எழுதுகோலாகிய நீ

பேசினாய்...
இன்னமும் பேசுவாய் ..பேசுவோம் !!!

எனது சிதறல்கள்

முதல் கிறுக்கல்

உணர்வுகளின் இறப்பிற்கு கல்லறை அமைத்தால்
அதற்கு இப்பிரபஞ்சம் போதுமா ??




பெண்



தன் சிறகு உடைக்கப்பட்டு விட்டது
என்பது கூட தெரியாமல் மீண்டும்
பறக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு
காத்திருப்பவள்....ஏக்கத்தில் ஊரிய
நெஞ்சம் இவளது..



மௌனம்







அறிந்து உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து
கொள்ளக் கூடிய இனிய மொழி !!!


இப்படியும் ஒரு வலி




நான் எப்படி எல்லாம் இருந்தேன் என்று
எண்ணும் போது எழும் நினைவுகள்
தருவது ....






யாருமில்லா நேரத்தில்




தனிமையில் தவிக்கும் இதயத்திற்கு
ஜன்னலின் ஓரமாய் வீசும் காற்று
மட்டுமே துணை !!!

Wednesday, April 20, 2011

மௌனக் கனவுகள்( ∂є∂ι¢αтє∂ 2 αℓ gαℓz)




சிறகுகள் உண்டு...பறக்க வழியில்லை ...
சிந்தனை உண்டு...சிந்திக்க வழியில்லை ...
சந்தோஷம் உண்டு...சிரிக்க வழியில்லை ...
சுதந்திரம் உண்டு...சுவாசிக்க வழியில்லை ...
ஆசை உண்டு...அனுபவிக்க வழியில்லை ...
கனவு உண்டு...மெய்ப்பிக்க வழியில்லை ...
அன்பு உண்டு...ஆர்ப்பரிக்க வழியில்லை ...
காதல் உண்டு...வெளிப்படுத்த வழியில்லை ...
ஏக்கம் உண்டு...சொல்வதற்கு வழியில்லை ...
மொத்தத்தில் கூண்டு இல்லை...ஆனால்
அதற்குள் தான் இருக்கிறோம்...
ஆம் என் தேசத்து பெண்களின் நிலைதான் இது...
சோதனை உண்டு...சொல்வதற்கு ஆளில்லை...
வேதனை உண்டு...வேண்டுவதற்கு ஆளில்லை...
கற்பனை உண்டு...கேட்பதற்கு ஆளில்லை...
வாழ்வு முழுவதும் இல்லை என்பதே அதிகம்!!!

Saturday, April 16, 2011

கேள்விக் குறிகள் கேள்வி கேட்க மட்டுமே!!!

சொல்லடி சிவசக்தி!!!எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!!!

சிவசக்தியே நீதான் இவ்வுலகில் மனிதர்களை படைக்கிறாய்
எனில்உன்னிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுகிறேன்.....
தயவு செய்து சுடர்மிகும் அறிவுடன் இனி யாரையும் படைக்காதே...
எங்களால் இவ்வுலகில் வாழவும் இயலாது....சாகவும் இயலாது...
சகிக்கவும் இயலாது...சாதிக்கவும் இயலாது...
பொறுக்கவும் இயலாது...பொங்கவும் இயலாது...
மொத்தத்தில் பல சுனாமிகள் மனதினுள் எழுகிறது...
உள்ளத்தில் தினம் தினம் வெடிக்கும்
எரிமலைக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்???

Wednesday, April 13, 2011

என் இந்தியாவே !!!

மிதவாதிகள் கூறிய வழியில் சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும்
என் இந்தியாவே அவர்களின் கோட்பாட்டின் படியே ஆட்சி நடக்கிறதோ??
அவர்களைப் போன்றே நீயும் மிதந்து கொண்டிரு....
கூடிய விரைவில் மூழ்கப் போகிறாய்!!!
அப்போது அமெரிக்கா,இங்கிலாந்த் போன்ற நாடுகள் எல்லாம் உன்
குரல் கேட்டு ஓடோடி வரும்..
கைக் கொடுத்துக் காப்பாற்றுவதற்கு அல்ல...
உள்ளேயே வைத்து சமாதி கட்டுவதற்கு!!
நான் பிழைத்தால் அதை ஒரு புத்தகமாக எழுதி
வருங்கால சந்ததியினர்க்கு சமர்பிக்கிறேன்...

-உணர்வில்லாத நாட்டில் வாழும் உணர்வற்ற இந்தியப் பிரஜை