உன் வதங்கிய குண்டாவினுள்ளும் பழைய சேலையினுள்ளும் எங்கள் இளமைக்கால நினைவுகள் பொதிந்துள்ளது.ஆண்டிக்காடு ஏரியின் மேல் உன் முந்தானையை பிடித்துக் கொண்டு எத்தனை முறை நடந்திருப்போம்.கொல்லங்காட்டிலு
உன் முந்தானையின் வாசமும் மடியின் அரவணைப்பும் இல்லாமல் ஏங்குகிறோம்.
இப்படி ஒரு உறவை இனி எங்கு சென்றும் பெற இயலாது.
அரிதினும் அரிதான உறவு நீ.யாருக்கும் கிடைக்கிறதா அன்பு நீ.
நீ வளர்த்த 4 கொள்ளுப் பிள்ளைகள் உன் பாசத்தையும் பண்பாட்டையும் கடத்தட்டும்.
உழைப்பு,தைரியம், அன்பு, உண்மை , சகிப்புத்தன்மை இவற்றை வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தாய். வாழ்க்கையை இயல்பாய் தைரியமாய் கடந்த நீ, உன் வாழ்வையே எங்களுக்கு பாடமாய் விட்டுச் சென்றுள்ளாய்.
நீ கொடுத்த பாடத்தை எடுத்துக்கொண்டு நீ இல்லாமல் பயணிக்க போகிறோம்.
அடுத்த முறை மனிதனாகப் பிறப்போம் எனில் நீயே எங்கள் அம்மாச்சியாக வரவேண்டும்.
போய் வா திருமகளே! லட்சுமியே! எங்கள் குடும்ப சாமியே!
- உன் நினைவுகளை சுமக்கும் நாங்கள் .....
