Saturday, September 29, 2012

நவீன மாப்பிளைகள்!!

வீரமும் தன்மானமும் உள்ள எந்த ஆண் மகனையும் சாடி இது எழுதப்படவில்லை..
அவர்கள் எவரேனும் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து கொதிப்டையாதீர்கள்..
ஆண் பெண் சமம் என்ற இன்றைய சமுதாயத்திலும் பெண்ணைப் பெற்ற குடும்பத்தினர் படும் துயரத்தை காட்டவே இது எழுதப்பட்டுள்ளது..

இரு மனங்கள் கூடி ஓருயிரும் ஈருயிருமுமாய் 
ஒருவருக்கொருவர் தம்மை அர்ப்பணித்து ஒன்றாய் கலப்பதே 
திருமண வாழ்க்கையாம்...


அத்தகைய திருமணப் பொருத்தங்கள் நம் தமிழ்நாட்டில் இப்பொழுது எப்படி பார்க்க படுகின்றன தெரியுமா??
மனம்,குணம்,தியாக உணர்வு,பண்பு ..இவைகளில் எதற்குமே முக்கியம் இல்லை.. இதையும் தாண்டி பணம்,பொன்,அதிலும் முக்கியமாக தோட்டம்,பெண் படித்திருக்க வேண்டும்..
இந்த வரனிடம் இதெல்லாம் குறைவா ? 
அடுத்த வரனிடம் அதிக வரவா? ஓடு அங்கே...
இவர்களின் உணர்வு எப்படி போனால் நமக்கென்ன ..
இவ்வாறு நாளொன்றுக்கு ஒரு குடும்பத்தில் ஒரு சம்பவம்..எங்கே போகிறது இச்சமுதாயம்??
யாரோ ஒருவர் உருகி உருகி உழைப்பதை உழைப்பே இல்லாது 
முன்றாவது மனிதர்கள் பிடுங்கி கொள்கின்றனர்..அதற்கு அவர்கள் இட்டு கொள்ளும் பெயர் திருமணமாம்!! ம்ம்ம் மறைமுகமான சுரண்டல் ..

நாங்கள் வரதட்சணை எல்லாம் வாங்குவது இல்லை..நீங்கள் உங்கள் பெண்ணின் பாதுகாப்பிற்கு கொடுங்கள் என்று நவ நாகரீகத்தில் நாசுக்காக பணம் வாங்கும் மதிப்பிற்குரிய மாப்பிள்ளைகளே !!
21 - ம் நூற்றாண்டின் பாரதி வழி பெண்களாகிய நாங்கள் வாக்களிக்கிறோம் இதோ..
எங்களை நற்குணத்தோடு நற்பண்போடு வசதிக்கு மீறினாலும் பரவாயில்லை கடனை வாங்கியாவது எங்கள் பெற்றோர்கள் உங்களை கைபிடிக்க வைப்பார்கள்.. நாங்கள் உடலில் ஆரோக்கியம் உள்ள வரை உங்களுக்கு தினமும்  உண்ண உணவு , உடுக்க உடை ,காருக்கு பெட்ரோல் செலவு எல்லாவற்றையும் ஏற்கிறோம் ...நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி இல்லை குட்டிச் சுவரில் அமர்ந்து நாட்டுக் கதை பேசினாலும் சரி நாங்கள் எதுவுமே கேட்க மாட்டோம் ..ஆண் என்ற கர்வத்தில் நீங்களும் ஆண் மகனைப் பெற்றோம் என்ற கர்வத்தில் உங்கள் பெற்றோரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இளைப்பாறுங்கள்..
ஆனால் தன்னம்பிக்கை, தன்மானம் மற்றும் தமிழனுக்கே உரித்தான வீரம் ஆகியவற்றை மட்டும் எங்களுக்கு விட்டு கொடுத்து விடுங்கள்...

இறுதியாக பெண் வீட்டாரும் உங்கள் பெண்ணிற்கு குணம் பார்த்து வரன் தேடுங்கள் ..பணம் பார்த்து அல்ல..
இல்லறம் என்பது உன்னதமானது !!அதை இரு வீட்டாரும் வியாபாரம் ஆக்காதீர்கள்..