Saturday, July 30, 2011

நானும் என் எழுதுகோலும்



சொல்வளத்தில் திளைத்திருந்தும்
சொல்ல இயலாத என் எண்ணங்களை
சிதறடிக்கச் செய்தாய்...

என் உணர்வு கொல்லப்படும்
போதெல்லாம் கண்களில் கண்ணீருடன்
வந்தேன் உன்னிடம்..யாராலும்
அளிக்க முடியா ஆறுதலை
அளித்தாய் நீ எனக்கு !!

வெகுண்டு புழுங்கி மனதின்
உள்ளேயே வைத்திருந்த
பல குமுறல்களை
காகிதத்தை கண்ட உடன்
வெளியே இறக்கச் செய்தாய்
உன் வாயிலாக ....

பல நேரங்களில் என்னை எனக்கே
எடுத்துக் காட்டிய கண்ணாடியாகவும்
இருப்பாய் நீ எனக்கு ...

உயிரற்ற பொருளாய் அனைவரும்
உன்னை பார்த்தாலும்
உயிர் உள்ளவர்களால் கூட
புரிந்து கொள்ள முடியாத உணர்வைப்
புரிந்து கொண்டு மெதுவாய் காற்றில்
அசைந்தாடி நீ எழுதும் எழுத்துக்களே
என் கண்ணீருக்கான விலைகள்...

மற்றவர்களோடு நான் பயணித்ததை
விட உன்னோடு நான் செய்த
பயணங்களே அதிகம் ...

மனம் பேசாத பல விஷயங்களை
கண்கள் பேசாத மொழிகளை
என் எழுதுகோலாகிய நீ

பேசினாய்...
இன்னமும் பேசுவாய் ..பேசுவோம் !!!

3 comments:

  1. கண்டிப்பாக பேசுவோம் :)

    ReplyDelete
  2. உணர்வுகளை பதிவுசெய்ய மட்டும்மல்ல, புரட்சிகள் வெடிப்பதற்கும் பல சமயங்களில் எழுதுகோலே உதவுகின்றன...
    வாளினும் வலியது எழுதுகோல்!!!! தொடர்ந்து பேசுங்கள்!!! மறுமலர்ச்சி பரவட்டும்!!!

    ReplyDelete
  3. உலகிலேயே மிக அதிகமான வலியை தாங்கும் சுமை தாங்கி காகிதம்

    மிகவும் அழகான உணர்வு

    ReplyDelete