வீரமும் தன்மானமும் உள்ள எந்த ஆண் மகனையும் சாடி இது எழுதப்படவில்லை..
அவர்கள் எவரேனும் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து கொதிப்டையாதீர்கள்..
ஆண் பெண் சமம் என்ற இன்றைய சமுதாயத்திலும் பெண்ணைப் பெற்ற குடும்பத்தினர் படும் துயரத்தை காட்டவே இது எழுதப்பட்டுள்ளது..
இரு மனங்கள் கூடி ஓருயிரும் ஈருயிருமுமாய்
ஒருவருக்கொருவர் தம்மை அர்ப்பணித்து ஒன்றாய் கலப்பதே
திருமண வாழ்க்கையாம்...
அத்தகைய திருமணப் பொருத்தங்கள் நம் தமிழ்நாட்டில் இப்பொழுது எப்படி பார்க்க படுகின்றன தெரியுமா??
மனம்,குணம்,தியாக உணர்வு,பண்பு ..இவைகளில் எதற்குமே முக்கியம் இல்லை.. இதையும் தாண்டி பணம்,பொன்,அதிலும் முக்கியமாக தோட்டம்,பெண் படித்திருக்க வேண்டும்..
இந்த வரனிடம் இதெல்லாம் குறைவா ?
அடுத்த வரனிடம் அதிக வரவா? ஓடு அங்கே...
இவர்களின் உணர்வு எப்படி போனால் நமக்கென்ன ..
இவ்வாறு நாளொன்றுக்கு ஒரு குடும்பத்தில் ஒரு சம்பவம்..எங்கே போகிறது இச்சமுதாயம்??
யாரோ ஒருவர் உருகி உருகி உழைப்பதை உழைப்பே இல்லாது
முன்றாவது மனிதர்கள் பிடுங்கி கொள்கின்றனர்..அதற்கு அவர்கள் இட்டு கொள்ளும் பெயர் திருமணமாம்!! ம்ம்ம் மறைமுகமான சுரண்டல் ..
நாங்கள் வரதட்சணை எல்லாம் வாங்குவது இல்லை..நீங்கள் உங்கள் பெண்ணின் பாதுகாப்பிற்கு கொடுங்கள் என்று நவ நாகரீகத்தில் நாசுக்காக பணம் வாங்கும் மதிப்பிற்குரிய மாப்பிள்ளைகளே !!
21 - ம் நூற்றாண்டின் பாரதி வழி பெண்களாகிய நாங்கள் வாக்களிக்கிறோம் இதோ..
எங்களை நற்குணத்தோடு நற்பண்போடு வசதிக்கு மீறினாலும் பரவாயில்லை கடனை வாங்கியாவது எங்கள் பெற்றோர்கள் உங்களை கைபிடிக்க வைப்பார்கள்.. நாங்கள் உடலில் ஆரோக்கியம் உள்ள வரை உங்களுக்கு தினமும் உண்ண உணவு , உடுக்க உடை ,காருக்கு பெட்ரோல் செலவு எல்லாவற்றையும் ஏற்கிறோம் ...நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி இல்லை குட்டிச் சுவரில் அமர்ந்து நாட்டுக் கதை பேசினாலும் சரி நாங்கள் எதுவுமே கேட்க மாட்டோம் ..ஆண் என்ற கர்வத்தில் நீங்களும் ஆண் மகனைப் பெற்றோம் என்ற கர்வத்தில் உங்கள் பெற்றோரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இளைப்பாறுங்கள்..
ஆனால் தன்னம்பிக்கை, தன்மானம் மற்றும் தமிழனுக்கே உரித்தான வீரம் ஆகியவற்றை மட்டும் எங்களுக்கு விட்டு கொடுத்து விடுங்கள்...
இறுதியாக பெண் வீட்டாரும் உங்கள் பெண்ணிற்கு குணம் பார்த்து வரன் தேடுங்கள் ..பணம் பார்த்து அல்ல..
இல்லறம் என்பது உன்னதமானது !!அதை இரு வீட்டாரும் வியாபாரம் ஆக்காதீர்கள்..

Apologies for writing in English...
ReplyDeleteThe below statement should have been the foremost sentence in the blog...
இறுதியாக பெண் வீட்டாரும் உங்கள் பெண்ணிற்கு குணம் பார்த்து வரன் தேடுங்கள் ..பணம் பார்த்து அல்ல..
And that would have ended the blog right away...
Hmmm... Over expectation is key problem in our marriage system...
A girl's family always expects her daughter to get married to a well-off family... Only then she will be happy is what they think...
My question is; Isn't she happy all these years with you...??
Also I completely condemn those comments about guys and their parents... Don't U have a brother who works hard? If not, don't U forget that your dad happened to be a "Mappillai" once...
and U could have been NOTHING if he had been soothing in home doing nothing all these years...
And Bharathiyar... Come on... He wanted the women to publicise their views and concerns but U all seem to pledge your parents thoughts...
So whose problem is that...??
THINK...!!
Hello thavasi,
Deletepls read de 1st 5 lines..im nt criticising al guys..al tes lines r fr de guys those who r doing tat..
hey common..evn here u ppl wants 2 support ly guys..y cant u think in both de perspective..
k i ll ask u one ques..பெண்களுக்கு அழிக்கப்படும் அங்கீகாரம்??ஏன் அது மட்டும் குறைவாக உள்ளது..என்ன காரணம் ?
giv a valid ans nd solution fr tis question..bcuz al tes r linked 2gether...thn i ll get back ma lines..
u kno wt bharathi told..
his line(1 example):
கற்பு நெறி என்று சொல்ல வந்தார்..இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்!!..
evrythn shud b common bw men&women..wtevr it may b..
still if u need i ll show u his lines..அவரது வரிகளில் அழ்ந்த அர்த்தங்கள் உண்டு..
hey Ponnu... :) Hope U r doing good and got accustomed to the new place...
DeleteHmmm... Thought I shouldn’t debate, but Bharathiyar brought me here again... Hope I didn’t say anything wrong... So please read again my comments about him... பொறுமையாக படிக்கவும்... :)
Anyways... I knew this verse... It’s that கும்மியடி பெண்ணே poem right? Even in that he has said “நாடு குலுங்கிட கும்மியடி”... I also remember that the poem speaks about not forcing a women to get married to whom she doesn’t wish to...
So, my question here is “Why is that you girls are approving to get married to such a depraved person... Hmmm...??”
Note: You didn’t reply my question in the previous comment!! lol...
Anddd... I am not supporting guys... I am just trying to help you understand the fact that, you are the decision maker... “It’s your life”...!!
Though I agree that women rights should be equal, but is that making an impact here in TN...?? I would say NO... But... It might make a huge impact in the northern parts of India... That is where most of the women are ill-treated...
Poems\Blogs\Articles\Speeches\Movies is not gonna make much impact... Unless until you girls and your family come out of the slavishness...
So... The Verdict: Ignore the demanding family. They got, nothing but, to change!! No other go... :)
Cheers...