உணர்வுகளின் இறப்பிற்கு கல்லறை அமைத்தால்
அதற்கு இப்பிரபஞ்சம் போதுமா ??
பெண்
தன் சிறகு உடைக்கப்பட்டு விட்டது
என்பது கூட தெரியாமல் மீண்டும்
பறக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு
காத்திருப்பவள்....ஏக்கத்தில் ஊரிய
நெஞ்சம் இவளது..
மௌனம்
அறிந்து உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து
கொள்ளக் கூடிய இனிய மொழி !!!
இப்படியும் ஒரு வலி
நான் எப்படி எல்லாம் இருந்தேன் என்று
எண்ணும் போது எழும் நினைவுகள்
தருவது ....
யாருமில்லா நேரத்தில்
தனிமையில் தவிக்கும் இதயத்திற்கு
ஜன்னலின் ஓரமாய் வீசும் காற்று
மட்டுமே துணை !!!



அருமை அருமை !!!!!
ReplyDeleteசிதறிய சொற்களை சேர்த்த விதம் அருமை
ReplyDelete